சிறைவாச விடுமுறை
சிறைவாச விடுமுறை அல்லது பரோல் (Parole), சிறைச்சாலையின் சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு, சிறைச்சாலையில் நன்னடத்தையுடன் நடந்து கொண்ட ஒரு சிறைக்கைதியை, தன் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மட்டும் சிறைச்சாலையிலிருந்து வெளியே அனுமதிக்கும் தற்காலிக விடுவிப்பாகும். இந்த தற்காலிக சிறை விடுவிப்பு (பரோல்) நாட்கள், மொத்த சிறைத்தண்டனை காலத்திலிருந்து கழிக்கப்படாது. ஆனால் பரோல் விடுவிப்பு காலத்திற்கு சிறைதண்டனை காலம் நீளும்.
பொதுவாக சிறைக்கைதி சிறைச்சாலைக்கு வந்து வெளியே கலந்து கொள்ள வேண்டிய முக்கியமாக நிகழ்வுகளுக்காக மட்டும், (குறிப்பாக மரணம், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு) பரோல் விடுவிப்பு வழங்கப்படும். பரோல் விடுவிப்பு எந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது நிகழ்வுகளுக்கு கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டாரோ அவைகள் தவிர வேறு எந்த நிகழ்வுகளில் அல்லது செயல்களில் ஈடுபடக்கூடாது. பரோலில் வெளி வந்த சிறைக்கைதி, சிறைச்சாலை கூறும் குறிப்பிட்ட காவல்நிலையத்தில் அன்றாடம் சென்று கையொப்பம் இடவேண்டும்.
என்ன செயல் செய்வதற்கு சிறைவிடுப்பில் வெளியே வந்த சிறைக்கைதி, அதைத் தவிர வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், பரோல் விடுவிப்பை ரத்து செய்து மீண்டும் சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சவுதாலாவின் பரோலை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்: உடனே சரணடைய உத்தரவு". Archived from the original on 2017-03-01. பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.